கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 13 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 13 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது..இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக 515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், இந்த 13பேரும் உள்ளடங்குவதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.இலங்கைக்குள் நேற்று கண்டறியப்பட்ட 502 கொரோனா தொற்றாளிகளில் 144 பேர் கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 96 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 47 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 215 பேர் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.இந்த நிலையில், 2020 ஜனவரியில் இருந்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,370 ஆகும்.அவர்களில், 36,716 பேர் மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.