மட்டுநகரில் வங்கி ஊழியருக்கு கொரோனா..இழுத்து மூடப்பட்ட தனியார் வங்கி.!!

மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.குறித்த வங்கில் கடமையற்றும் ஊழியர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து குறித்த ஊழியர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.