தீவிரம் பெறும் கொரோனாவின் மத்தியிலும் களைகட்டும் திருமணங்கள்..21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

அழுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி அழுத்கம பிரதேசத்தில் திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நபர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உடனடியாக ரெபிட் அன்டிஜன்ட் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.பின்னர் மணமகள் உட்பட 27 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அந்த தொற்றாளர்கள் பயாகல, பொத்துவில, மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும் எனவும் களுத்துறை சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.