கொரோனா தடுப்பூசி கொள்வனவில் இலங்கைக்கு நிதியுதவி செய்ய உலக வங்கி முன்வருகை..!!

கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு உதவுவதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி ஜயசுந்தர பண்டார இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது, கடன் உதவி வழங்குவதற்கு இணங்கப்பட்டுள்ளது.எவ்வாறெனினும், வழங்கப்பட உள்ள கடன் தொகை மற்றும் வட்டி வீதம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடுகள் இதுவரையில் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி தொடர்பில் மதிப்பீடு செய்தன் பின்னர் கடன் தொகை தொடர்பில் தீர்மானிக்க முடியும் என ஜயசுந்தர கூறியுள்ளதாக சிங்கள இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.உலகின் பல்வேறு நாடுகள் கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்து, தடுப்பூசிகளை ஏற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.