கொழும்பு வெள்ளவத்தையில் வேகமாகப் பரவும் கொரோனா..!! பல பிரபல கடைகள் சுப்பர் மார்க்கெட்டுகளுக்குப் பூட்டு.!!

யாழ்ப்பாணத் தமிழர்கள் அதிகம் வாழும் கொழும்பு வெள்ளவத்தையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ளன.

சுப்பர் மார்க்ட், பிரபல ஆடையகம் பிற கடைகள் சில இவ்வாறு மூடப்பட்டுள்ளன. குறித்த பல்பொருள் அங்காடி நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வெள்ளவத்தையில் கணிசமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வெள்ளவத்தையில் சில வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.