இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகலாம்.!! பிரபல நுண்ணுயிரியல் பேராசிரியர் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் திரிவடைந்துள்ளதை தொடர்ந்து, நாட்டுக்குள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் திரிபடைந்த வைரஸ் பரவலை கண்டறியும் பொருட்டு கொரோனா வைரஸின் ஆய்வக பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் பீடத்தின் நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நீலிகா மலாவிஜ் தெரிவித்தார்.வைரஸ் திரிபடைந்து கொண்டிருக்கிறதாஇ இலங்கையில் ஒரு புதிய மாறுபாடு உள்ளதா என்பதைக் கண்டறிய மாதத்திற்கு ஒரு முறை சோதனை செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.பேராசிரியர் நீலிகா மலாவி, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் ஒரு புதிய திரிபு கண்டறியப்பட்டமை, இலங்கையில் சடுதியாக தொற்றாளர் அதிகரித்தமை போன்ற காரணங்களையடுத்துஇ ஆய்வக சோதனையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.இப்போது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமான நிலையங்கள் விரைவில் முழுமையாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆய்வக சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.ஆய்வக சோதனையின் எண்ணிக்கையை ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு ஊடக மாநாட்டில் அவர் கூறினார்.
பேராசிரியர் நீலிகா மலாவிஜ், ஆய்வக சோதனைக்கு உலக சுகாதார நிறுவனம் பல்கலைக்கழகத்திற்கு உதவி வழங்கி வருகிறது என்றார்.இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் மாறுபாடுகள் கண்டறியப்பட்டாலும், கொரோனா வைரஸின் திரிபுகளை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.நாங்கள் இலங்கையில் திரிபடைந்த வைரஸை கூட காணலாம்’ என்று அவர் மேலும் கூறினார்.இப்போது சோதனை செய்யப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை புதிய வகைகளைச் சமாளிக்க மாற்றியமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.