விமானப் பணிப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி..!

ஸ்ரீலங்கன் விமானப் பணிப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் முற்றாக குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.கொரோனா தொற்றுக்கு இலக்கான 11 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் 102 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.