தற்போது கிடைத்த செய்தி.. இலங்கையில் இன்று மட்டும் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!!

நாட்டில் இன்று மட்டும் 555 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 856ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 826 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 36 ஆயிரத்து 155 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.இன்னும், ஏழாயிரத்து 497 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.