வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல அனுமதி..!

யாழ். மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வோருக்கான பாஸ் அனுமதிகள் இன்று காலையிலிருந்து மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமது மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் நீண்ட நாட்களாக யாழ். மாவட்டத்தில் தங்கியுள்ளனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இந்த நிலை காணப்பட்டு வருகிறது.எனினும், அரசாங்க அதிபர் எடுத்த முயற்சியின் பயனாக இன்று காலையில் இருந்து வெளி மாவட்டத்துக்கு செல்வோருக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதனை அடுத்து பொதுமக்கள் பாஸ் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.