சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கையை இன்று முதல் ஆரம்பித்தது இலங்கை இராணுவம்!!

இராணுவத் தலைமையகத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகன திணைக்களத்தின் ஊடாக இதற்கு முன்னர் அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.