புதிதாக வீடுகளை வாங்கக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஓர் நல்ல செய்தி..!! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு..இன்று முதல் ஆரம்பம்!!

பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீடுகளை வாங்குவதற்காக 2021 வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 6.25% சலுகை வட்டி விகிதத்துடன் கூடிய சிறப்புக் கடன் திட்டம் இன்று (1) முதல் செயல்படும்.

நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் கட்ட திட்டமிடப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் கீழ் இந்த வீடுகளை வாங்க இது வாய்ப்பளிக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த கடன் திட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் பணிபுரியும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.வழங்கப்பட்ட அதிகபட்ச கடன் தொகையாக நூறு லட்சம் காணப்படும். மேலும் திருப்பிச் செலுத்தும் காலம் இருபத்தைந்து ஆண்டுகள் வரை செல்லலாம். இந்த கடன் திட்டங்களை இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன செயல்படுத்துகின்றன.