நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் யாழில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்..!! இளம் யுவதி அதிரடியாகக் கைது!

யாழில் சிசுவொன்று நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியொன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 24 வயதான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் கிளிநொச்சியில ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார்.திருமணத்திற்கு முன்னரான உறவின் மூலம் கர்ப்பிணியான யுவதி, கருக்கலைப்பு முயற்சியில் ஈடுபட்டு, உயிரிழந்த நிலையில், குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை வீட்டு வளவிலேயே புதைத்துள்ளனர்.அதிக இரத்தப் போக்கு காரணமாக, யுவதி நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதன்போது யுவதி குழந்தை பிரசவித்த தகவல் கிடைத்தது.இதையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று நேற்று மாலை சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.