சிறு குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஓர் நற்செய்தி..! வீடு தேடி வரும் திரிபோஷா..!!

சிறு குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா வகைகளை குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாத நிறையின் அடிப்படையில் குறித்த திரிபோஷாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விட்டமின் வகைகளையும் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.எவ்வித இடையூறும் இன்றி இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறு, அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எமது இணையப் பக்கத்தில் மேலதிக காணொளிகளை பார்வையிட இந்த இணைப்பில் அழுத்துங்கள்…!!