கொரோனாவால் ஒரே நாளில் 981 பேர் மரணம்..!! மீண்டும் லண்டனில் நடக்கும் பயங்கரம்..! இன்றிரவு தீர்க்கமான லொக் டவுணை அறிவிக்கத் தயாராகும் அரசாங்கம்..!!

பிரித்தானியாவில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 981 பேர் இறந்துள்ள விடயம் பிரித்தானியாவை புரட்டிப் போட்டுள்ளது. இதனை அடுத்து நாடு தழுவிய ரீதியில் டயர் 4 என்று அழைக்கப்படும் இறுக்கமான லொக் டவுனை அறிவிக்க பொறிஸ் ஜோன்சன் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து பாடசாலைகளையும் கால வரையறை இன்றி மூடவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.சில பள்ளிகள் ஜனவரி 18ம் திகதி திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மறு அறிவித்தல் வரும் வரை பள்ளிகளை மூடுவதே நல்லது என்ற எண்ணத்தில் பொறிஸ் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவித்தல் இன்று(31) வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.இன் நிலை நீடித்தால், நாள் ஒன்றுக்கு பிரித்தானியாவில், 1,000 பேர் வரை இறக்க வாய்ப்புகள் உள்ளது. 10 நாட்களில் 10,000 ஆயிரம் பேர் இறந்து இருப்பார்கள்.எனவே முழு அளவில் லாக் டவுனை அறிவித்துவிட்டு,ஊசிகளை போட்டு முதலில், கொரோனாவுக்கு ஒரு தடுப்பு சுவரை எழுப்பாவிட்டால். பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பது திண்ணம்.