இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள கொரோனா தடுப்பூசி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள மிக முக்கிய தகவல்!!

கொரோனா தடுப்பூசி முதன்முதலில், சுமார் 4 மில்லியன் மக்களுக்கு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போது தயாரிக்கப்படுகின்ற தடுப்பூசிகளில் ஒன்றை உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்களுக்கு தேவையான அளவில் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தினுடன் கலந்துரையாடி, நாட்டிற்கு பொருத்தமான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.