கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய ஐந்து நபர்கள்..!! கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல்!

கொரோனா தொற்று தொற்றுக்குள்ளாகி பொலன்னறுவை – கலெல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நீர்கொாழும்பு சிறைச்சாலையை சேர்ந்த ஐந்து கைதிகள் இன்று (31.12.2020) காலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


குறித்த கைதிகள் நீர்கொாழும்பு சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டவர்களாவர்.கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரால் கலெல்ல மற்றும் பொலன்னறுவைப் பகுதிகளில் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.தப்பியோடிய கைதிகள் 22 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.