கொரோனாவினால் சிக்கித் தவிக்கும் வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள ஓர் நற்செய்தி..!! இன்று முதல் ஆரம்பம்..!!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 2500 இலங்கையர்களை இன்று முதல் 2021 ஜனவரி 09 வரை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இதன்படி அவர்களை அழைத்து வருவதற்கான திகதி நாடாளாவிய ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது.

30 டிசம்பர்: ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 305 பேர்
31 டிசம்பர்: 290 பேர் சென்னையிலிருந்து
01 ஜனவரி: ஆஸ்திரேலியாவிலிருந்து 290 பேர்
03 ஜனவரி: குவைத்திலிருந்து 340 பேர்
05 ஜனவரி: கனடாவிலிருந்து 100 பேர், கத்தார் மற்றும் ருமேனியாவிலிருந்து 290 பேர்
07 ஜனவரி: சைப்ரஸிலிருந்து 260 பேர்
08 ஜனவரி: ஆஸ்திரேலியாவிலிருந்து 290 பேர்
09 ஜனவரி: ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 290 பேர்அழைத்துவரப்படும் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவுடன் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், இராணுவம் வழிநடத்தும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும், கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்படுவர் எனவும் அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இலங்கை 137 நாடுகளில் இருந்து 59,377 இலங்கையர்களை அழைத்து வந்துள்ளது.சுமார் 26,812 இலங்கையர்கள் மத்திய கிழக்கிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.கிழக்கு ஆசியாவிலிருந்து 12,005, தெற்காசியாவிலிருந்து 10,033, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலிருந்து 5,484, ஆபிரிக்க பிராந்தியத்திலிருந்து 2026, வட அமெரிக்காவிலிருந்து 2,124, ரஷ்யாவிலிருந்து 1,605, மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து 189 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.அமைச்சர் நமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கும் போது, டிசம்பர் இறுதிக்குள் 11,323 இலங்கையர்கள் திருப்பி அழைத்து வரப்படுவர் எனவும் தெரிவித்தார்.இந்த புள்ளிவிவரங்கள் 12,395 வரை உயரும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.