யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி..!! நேற்று மட்டும் 13 பேருக்குத் தொற்று..!!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பரிசோதனையிலேயே மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் நேற்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் 676 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.இதில், உடுவில் பகுதியில் 8 பேருக்கும், சண்டிலிப்பாய் பகுதியில் 3 பேருக்கும், தெல்லிப்பளையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.மேலும், புதுக்குடியிருப்பில் ஒருவருக்கும் மாதகல்- தம்பகொல பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்குமாக, பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதியானது அதில் 12 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.