கொரோனா தொற்றின் எதிரொலி..இலங்கையில் இழுத்து மூடப்பட்ட வைத்தியசாலை விடுதி..!!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் 15 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வைத்தியர் ஒருவருக்கும் இரண்டு தாதியர்களுக்கும் சுகாதார ஊழியர்கள் இருவருக்கும் 9 நோயாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.