சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் 9 பேருக்கு கொரோனா..!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களிற்கு தொற்று உறுதியானது.

இன்று 240 மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள்.முதலாவது பிசிஆர் சோதனையில் தொற்று அடையாளம் காணப்படாத நிலையில், இரண்டாவது பிசிஆர் சோதனையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்மூலம் மருதனார்மட உபகொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.