கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 08 துறையினருக்கு அரசாங்கத்தின் 5, 000 ரூபா விசேட கொடுப்பனவு..!!

கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமூக நிவாரணமாக 5,000 ரூபா வழங்குவதற்காக கிராமிய குழுக்கள் செயற்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் மகளிர் விவகார சமூக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களை தொடர்ச்சியாக வழங்குதல், நடவடிக்கை ஒருங்கிணைப்பு, மற்றும் மீளாய்வு என்பவற்றுக்காக ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலின் கீழ் பின்வரும் துறையினர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், அரச சேவையில் ஈடுபடாத ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள், கைவினைக் கலைஞர்கள், கைத்தறி நெசவுத் தொழிற்துறையினர், நீதிமன்றத்தினூடாக பராமரிப்பு கொடுப்பனவுபெறும் பெண்கள், வருமானம் இழந்துள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், ஆகியோருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அமைச்சு அறிவித்துள்ளது.இந்த எட்டு வகையினரும், பதிவு தம்மை பதிவு செய்துள்ள அரச மற்றும் மாகாண மட்ட நிறுவனங்களினூடாக பெறப்பட்ட பெயர்ப்பட்டியல் அமைச்சிற்கு கிடைத்துள்ளதோடு அவற்றை கிராமிய மட்ட குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர கிராமிய குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள கிராமிய கைத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ளோர்,கிராமிய மட்டத்தில் சேவை வழங்குவோர்,கிராமிய விநியோகங்களில் ஈடுபடுவோர் ஆகியோருக்கும் இந்தக் கொடுப்பவை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

எமது இணையப் பக்கத்தில் மேலதிக காணொளிகளை பார்வையிட இந்த இணைப்பில் அழுத்துங்கள்…!!

தம்மை பதிவு செய்துள்ள இடத்திற்கு வெளியில் வசிக்கும் நபர்களுக்கும் அவர்கள் தற்பொழுது வசிக்கும் பகுதியில் வைத்து இந்த சமூக நன்மைகளை பெற முடியும். தமது தொழில் பதிவு அடையாளம் மற்றும் வசிப்பிடத்தை உறுதி செய்து கிராமிய குழுவிற்கு தமது விண்ணப்பத்தை முன்வைக்க வேண்டும். இந்தத் திட்டம் நாட்டின் சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள கிராமிய குழுக்களினூடாக முன்னெடுக்கப்படுவதாகவும், மகளிர் ,சிறுவர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.