தற்போது கிடைத்த செய்தி..யாழ்.பருத்தித்துறையில் திடீரென உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்..!!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இன்று இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை சாரையடிப் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவரே உயிரிழந்தார். இன்று அவருக்கு ஏற்பட்ட திடீர் குருதிப் பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதன் முடிவுகள் கிடைத்ததும் பிரேத பரிசோதனை இடம்பெறும்.