வருங்காலத்தில் அமெரிக்க இராணுவத்தில் இணைந்து எதிரிகளை போட்டுத் தள்ளப் போகும் ரோபோக்கள் ஆடும் அசத்தல் நடனம்.!! (இணையத்தில் வைரலாகும் காணொளி)

ஏதோ கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை என்ற பாடலுக்கு ஆடும் எலும்புக் கூடு அல்ல இவைகள். அமெரிக்க பொஸ்டன் டயனமிக்ஸ் என்ற கம்பெனி ரகசியமாக தயாரித்து வரும் ரோபோக்கள் தான் இவை. உலகில் அதி முன்னணி வகிக்கும் ரோபோ கம்பெனி தான் பொஸ்டன் டயனமிக்ஸ். இவர்கள் அதி நவீன ரோபோக்களை தயாரித்து வருகிறார்கள். இந் நிறுவனத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து பணம் செல்கிறது.


இவர்கள் தயாரிக்கும் சில ரோபோக்கள், பிற்காலத்தில் அமெரிக்க ராணுவத்தில் வீரர்களாக இணைக்கப்பட உள்ளது என்பது ஆச்சரியமான விடையம் தான். வருங்காலத்தில் எதிரிகளை போட்டு தள்ள இவைகள் தயாராகி வருகிறது. 1988ம் ஆண்டு வெளியான டு…யூ…லவ் …. மீ என்ற பாடலுக்கு அச்சு அசலாக ஆடுகிறது பாருங்கள்.