நல்லூர் பிரதேச சபையையும் வென்றது மணிவண்ணன் குழு..!! உட்கட்சி மோதலினால் மண்கவ்வியது கூட்டமைப்பு..!!

நல்லூர் பிரதேசசபை தவிசாளராக மணிவண்ணன் தரப்பு வேட்பாளர் ப.மயூரன் தெரிவானார்.

பகிரங்க வாக்கெடுப்பா, இரகசிய வாக்கெடுப்பா என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பகிரங்க வாக்கெடுப்பிற்கு தீர்மானிக்கப்பட்டது.பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கு.மதுசுதன் 8 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட மணிவண்ணன் தரப்பு வேட்பாளர் ப.மயூரன் 10 வாக்ககுகளையும் பெற்றார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மதுசுதனை ஆதரித்தது.பொ.ஐங்கரநேசனின் மாம்பழம் குழு 2, ஈ.பி.டி.பி 4, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு 3, உதயசூரியன் 1 என 10 வாக்குகள் ப.மயூரனிற்கு கிடைத்தது.முன்னாள் தவிசாளர் தியாகமூர்த்தி சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.