மிக நீண்ட நாட்களின் பின் இலங்கை வந்த உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா..!!

அண்மையில் இலங்கை வந்த உக்ரைனிய சுற்றுப்பயணக் குழுவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த மூவரும் ஒரு சிகிச்சை மையம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த திங்கட்கிழமை உக்ரைனிலிருந்து இலங்கைக்கு வந்த முதலாவது தொகுதி சுற்றுலா பயணிகளாக 180 பேர் கொண்ட குழுவில் அங்கம்வகித்திருந்தார்கள்.