வேறுபட்ட அறிகுறிகளுடன் பரவும் புதிய வைரஸ்! இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை..!!

பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் காரணமாக கொரோனா வைரஸ் உப கொத்தணிகள் புதிதாக உருவாகும் ஆபத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை உலகளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸானது இலங்கையில் 70 வீதம் வேகமாக பரவக்கூடிய ஆபத்து காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன் இந்த புதிய வைரஸின் அறிகுறி கொரோனா தொற்றின் அறிகுறியிலிருந்து, வேறுபட்டதாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.