இலங்கை மக்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் செய்தி..கொரோனாவிலிருந்து விரைவில் விடுதலை!! வருகிறது தடுப்பூசி..!!

இலங்கை மக்களுக்கு கொவிட் தடுப்பூசி அடுத்த வருடம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை நடவடிக்கை தொடர்பில் தற்போது திட்டமிடப்படுகிறது.உலகளவில் தற்போது வௌியிடப்பட்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னர் இலங்கைக்கு ஏற்ற தடுப்பூசியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் அடுத்த வருடம் முதல் இரு மாதங்களுக்குள் தடுப்பூசியை நாட்டிற்குள் கொண்டு வர எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை ரஷ்யா, சீனா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்திலும் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை இலங்கைக்குத் தருவிப்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.இலங்கை கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வது பற்றி சட்ட ரீதியான பொறிமுறையொன்றை உலக சுகாதார ஸ்தாபனம் முன்மொழிந்துள்ளது.தடுப்பூசியைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது பற்றிய சகல மாற்று வழிகள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.