இலங்கையில் மேலும் 549 கொரோனா நோயாளர்கள் அடையாளம்!! நேற்று மட்டும் மூவர் மரணம்!!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 549 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 530 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.ஏனைய 19 பேர் ஜோர்தானிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்பதுடன் அவர்களில் ஒரு கடற்படை ஊழியரும் அடங்குவர்.இதனால், இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 41,603 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு ‍தெரிவித்துள்ளது.இதேவேளை பேலியகொட – மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 37,890 ஆக பதிவாகியுள்ளது.இது இவ்வாறிருக்க, நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 520 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 33,221 ஆக உயர்வடைந்துள்ளது.தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 8,188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 614 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

 

இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.அதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 194 ஆக பதிவாகியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் (03) மரணம் உறுதி செய்யப்பட்டிருப்பதுடன் , இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 194 ஆகும்.தர்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் 24 உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமை, மற்றும் அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட மாரடைப்பு, என தெரிவிக்கப்பட்டுள்ளது.தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்திய சாலையில் 2020 டிசம்பர் 28 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் 22 ஆம் திகதி மரண மடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை, என அறிவிக்கப்பட்டுள்ளது.