பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு மாணவர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

ஒவ்வொரு மாணவர்களினதும் கல்வி கற்கும் உரிமையப் பாதுகாக்கும் வகையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தற்காலிகமாக மற்றொரு பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்குவதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே 2021 ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதே தவிர, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அந்த தீர்மானத்தை எடுக்கவில்லையென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்படி, இந்த திட்டத்தை நாட்டின் பிற பகுதிகளிலும் செயல்படுத்த, கல்வி அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.