யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயதுச் சிறுமி..!!

யாழ். இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுச் சிறுமியொருவர் நேற்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் சந்தியா (வயது- 14) எனும் சிறுமியே வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிறுமியின் இறப்பு தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.