இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலருக்கு ஜனாதிபதியினால் திடீர் பதவி உயர்வு..!!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்னவும் இலங்கை இராணுவத்தின் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.