சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ். இணுவிலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 666 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சாவகச்சேரி, சங்கானை, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 240 மாதிரிகள் இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.