தீவிரமடையும் கொரோனா தொற்று..உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்ட இலங்கையின் மற்றுமொரு பகுதி!!

ஹட்டன் வட்டவளையில் உள்ள மன்ஜித் தோட்டம் இன்று (28) முதல் மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டவளைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் இருந்து ஏராளமான கொவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.பாதிக்கப்பட்டவர்களின் ஏராளமான உறவினர்களும் நேற்று வரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதுவரை, ஆடை தொழிற்சாலையின் 59 ஊழியர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இத்தோட்டத்தில் உள்ளவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.