நுளம்பு வலை இரும்புக் கம்பியில் சடலமாக தொங்கிய சிறுவன்!! பொலிஸார் தீவிர விசாரணை..

பிலியந்தலை பகுதியில் உள்ள வீடொன்றில் 12 வயதான சிறுவன் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.நுளம்பு வலை தொங்விடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியொன்றில் தொங்கிய நிலையில்,சிறுனவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை பணிக்காகவும், தாய் வர்த்தக நிலையத்திற்கும் சென்றிருந்த தருணத்திலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.தனது 6 வயதான சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, குறித்த சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.வீட்டிற்கு வருகைத் தந்த தாய், மகனை காணவில்லை என தேடிய போதே, மகன் துணியொன்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.மகனை மீட்ட தாய், வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையிலும், வைத்தியசாலையில் சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள், சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மர்மமாக சிறுவன் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக, பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.