யாழ்.வல்லையில் கோர விபத்து..அதிவேகத்தினால் கடலுக்குள் பாய்ந்த வாகனம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்ததாக கருத்தப்படும் மீன் ஏற்றும் வாகனம் ஒன்று வல்லைப் பாலத்திற்கு நெருக்கமான கடற்பகுதியில் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.குறித்த வாகனம் இரும்புப் பாலத்தில் சறுக்கி வீழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது.

வாகனத்தின் உள்ளே, மீன் ஏற்றப்பயன்படுத்தப்படுகின்ற றெஜிபோம் பெட்டிகள் காணப்படுகின்றன.அதேவேளை, சாரதியின் பக்கத்து கதவு திறந்து காணப்படுகின்ற நிலையில், சாரதி தானாகவோ அல்லது வேறு யாருடைய துணையுடனோ மீண்டிருக்கலாம் என்று கருதப்படுகின்ற போதிலும் அவருக்கு என்ன நடந்தது என்பதை உடனடியாக அறிய முடியவில்லை.