ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி..கொழும்பு வெள்ளவத்தையில் இழுத்து மூடப்பட்ட பிரபல தனியார் வங்கி!!

கொழும்பு – வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல வங்கியொன்று இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரபல தனியார் வங்கியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட வங்கிக் கிளை இன்று காலை அதிரடியாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, வங்கியின் ஏனைய ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.