திருமண நிகழ்வினால் நேர்ந்த விபரீதம்..மணமகள் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று..!!

அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.கடந்த 16ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த மணமகளுக்கும் கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாவதாக மணமகளுக்கும் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.பிரதேச சுகாதார பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் மக்கோன பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 42 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.