கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிரித்தானிய மக்களுக்கு கிடைத்த நல்ல செய்தி.!! நாளை முதல் நிகழப் போகும் பெரும் மாற்றம்!!

தற்போது பைசர் என்னும் மருந்து பெல்ஜியம் நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனை பெரும் செலவில் பிரித்தானிய அரசு பெற்றுவருகிறது.ஆனால், பிரித்தானியாவின் ஆக்ஸ்ஃபேட் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கொரோனா எதிர்ப்பு மருந்து, திங்கட்கிழமை காலை பிரித்தானியா சுகாதார துறையினரால் அங்கிகரிக்கப்படுவதோடு. உலக சுகாதார நிறுவனத்தினாலும் அங்கிகரிக்கப்படவுள்ளது என்ற நல்ல செய்தி கிட்டியுள்ளது.


சுமார் 15 மில்லியன் மருந்துகள் தாயாராகிக் கொண்டு இருப்பதாகவும், வரும் ஆண்டு(2021) பெப்ரவரி மாதத்தோடு கொரோனா இல்லாத பிரித்தானியா உருவாகும் என்ற நம்பிக்கை தற்போது பிறந்துள்ளதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.இதனையே கேம்- சேஞ்சர் என்று அழைக்கிறார்கள். அதாவது பெரும் மாற்றம் ஒன்று நிகழவுள்ளது. இதனூடாக மிக மிக குறைந்த செலவில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் இன்னும் சில வாரங்களில் தயாராகி விடும். அது மட்டும் அல்லாது, பிரித்தானியா ஆக்ஸ்ஃபேட் மருந்தை உலகில் உள்ள பல நாடுகளுக்கு பிரித்தானியா இனி ஏற்றுமதி செய்து பெரும் பில்லியன் கணக்கான, பவுண்டுகளை பெறவுள்ளது.