தற்போது கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த பி.சீ.ஆர் பரிசோதனையில் மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதியானது.

இன்று 393 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதன் போது, சங்கானை பகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர் ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரோடு நேரடி தொடர்பை கொண்டிருந்ததன் காரணமாக தனிமைப்படுத்திலில் இருந்தவர்.இது தவிர, போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பரிசோதனைக்கு உட்பட்ட ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.