தீவிரமாகும் கொரோனா தொற்று..உடன் அமுலுக்கு வரும் இன்று முதல் தனிமைப்படுத்தப்படும் நாட்டின் முக்கிய பிரதேசங்கள்!!

நாட்டில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட மற்றும் கொடகவெல ஆகிய பகுதிகளின் சில இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இந்நிலையில், எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மின்னான, விலேகொட, யக்குதாகொட, அஸ்காகுல்ல -வடக்கு, போபத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.மேலும், கொடகவெல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறக்குவானை நகரம், இறக்குவானை – வடக்கு, இறக்குவானை – தெற்கு, மசுமுல்ல, கொட்டலை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் உனடடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில், கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதனாலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.