ஒரே நாளில் உலகத்தை உலுக்கிய கொரோனா… உச்சத் தொகையை எட்டிய அமெரிக்கா..!! நேற்று மட்டும் 7 ஆயிரம் பேர் பலி..!!

கொரோன வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 800 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை 25 இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், இதுவரை 25 இலட்சத்து 57 ஆயிரத்து 214 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6 இலட்சத்து 90 ஆயிரத்து 672 பேர் குணமடைந்துள்ளனர்.அத்துடன், நேற்று மட்டும் 7 ஆயிரத்து 62 ஆக மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 77 ஆயிரத்து 641 பேர் மரணித்துள்ளனர்.அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 2 ஆயிரத்து 804 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 45 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ளது.மேலும், நேற்று மட்டும் 25 ஆயிரத்து 985 பேர் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 18 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்தோர் இதுவரை 82 ஆயிரம் பேரே குணமடைந்துள்ளனர்.அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணமே கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன் அங்கு நேற்று மட்டும் 764 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் அங்கு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.அந்தவகையில், இதுவரை 19 ஆயிரத்து 693 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், குறித்த மாநிலத்தில் மட்டும் 2 இலட்சத்து 56 அயிரத்து 555பேர் வைரஸ் தொற்றுக்கு இதுவரை இலக்காகியுள்ளனர்.இதனைவிட அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூஜெர்ஸியில் நேற்று 376 பேர் மரணித்துள்ளதுடன், மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து நேற்று பென்சில்வேனியாவில் 266 பேர் மரணித்துள்ளதோடு, மிச்சிகன் மாகாணத்தில் 232 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளனர்.அமெரிக்காவில் இதுவரை 42 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 906 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.அத்துடன், நேற்று குறித்த நாடுகளில் 3 ஆயிரத்து 415 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த நாட்களைவிட உயிரிழப்புக்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.ஐரோப்பிய நாடுகளில் நேற்று 26 ஆயிரத்து 955 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் கடந்த சில வாரங்களை விட தற்போது ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் மொத்தமாக 11 இலட்சத்து 40 ஆயிரத்து 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இதுவரை 3 இலட்சத்து 44 ஆயிரத்து 820 பேர் குணமடைந்துள்ளனர்.குறித்த நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வந்தநிலையில் நேற்று கணிசமாக உயிரிழப்புக்கள் குறைந்துள்ளன.அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 534 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 24 ஆயிரத்து 648 ஆகப் பதிவாகியுள்ளன.மேலும், நேற்று புதிய நோயாளர்கள் 2 ஆயிரத்து 729 பேர் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 957 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை பதிவாகியுள்ளது.இதனைவிட, ஸ்பெயினில் நேற்று 430 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் மொத்த மரணங்கள் 21 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளன.அத்துடன், புதிய நோயாளர்கள் 3 ஆயிரத்து 968 ஆக உள்ளதுடன் இதுவரை 2 இலட்சத்து 4 ஆயிரத்து 178 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 82 ஆயிரத்து 514 பேர் குணமடைந்துள்ளனர்.இதையடுத்து, பிரான்ஸில் கடந்த ஒருவார காலமாக ஆயிரத்து 500 வரை உயிரிழப்புக்கள் பதிவான நிலையில் கடந்த 3 நாட்களாக கணிசமாகக் குறைந்துள்ளதுடன் நேற்று 531 ஆக மரணங்கள் பதிவாகியுள்ளன.பிரான்ஸில் மொத்தமாக 20 ஆயிரத்து 796 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 50 பேராக அதிகரித்துள்ளது.இந்நிலையில் பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வைரஸால் நேற்று மட்டும் 828 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 17 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 301 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.இதனைவிட, ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 453 பேருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 95 ஆயிரத்து 200 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அந்நாட்டில் நேற்று 224 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 5 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளன.மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நேற்று 170 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த மரணங்கள் 5 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளன. அங்கு 40 ஆயிரம் பொருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனைவிட, நெதர்லாந்தில் நேற்று மட்டும் 165 பேர் மரணித்துள்ளதுடன் ரஷ்யாவில் 51 பேரும், அயர்லாந்தில் 43 பேரும் சுவீடனில் அதிகபட்சமாக 185 பேரும் நேற்று மரணித்துள்ளனர். அத்துடன் பிரெஸிலில் நேற்று 154 பேர் உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து, அமெரிக்க நாடான கனடாவில் நேற்று 144 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளன.இதனிடையே அடுத்த மாதம் 22ஆம் திகதிவரை அமெரிக்காவுக்குச் செல்லும் எயார் கனடா விமானங்களை அந்நிறுவனம் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.ஆசியாவில் நேற்று 377 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் துருக்கியில் 119 பேர் மரணித்துள்ளதுடன் ஈரானில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் பேரவத் தொடங்கிய சீனாவில் நேற்று 11 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் 600 இற்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகூடங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன.இது தொடர்பான தரவுகளை உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் கண்காணித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது இணையப் பக்கத்தில் மேலதிக காணொளிகளை பார்வையிட இந்த இணைப்பில் அழுத்துங்கள்…!!