கோப்பாய் கொரோனா மத்திய நிலையத்தில் களைகட்டிய கிறிஸ்மஸ் விழா!!

கோப்பாய் கொரோனா மத்திய நிலையத்தில் களை கட்டிய கிறிஸ்மஸ் விழா!!

மதிப்புக்குரிய ஐயா ரிஷி தொண்டன் அவர்களின் தலைமையில் சுப்பிரமணிய கோட்டம் இளைஞர் அமைப்பினரால் கோப்பாய் இராஜ வீதியில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரி கோவிட்-19 விசேட பராமரிப்பு நிலையத்திற்கு உணவுப் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்மஸ் பண்டிகையை குதூகலமாக கொண்டாடினார்கள்.இந்த கோப்பாய் கோவிட்- 19 சிகிச்சை நிலையத்தில் இதுவரையில் 1024 பேர் அனுமதிக்கப்பட்டு 636 பேர்சிகிச்சைகளை முடித்து வீடுகளுக்கு திரும்பியுள்ளார்கள். தற்போது 388 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.