குறைந்தது மூன்று வாரங்களுக்காவது நாட்டை ழுழுமையாக முடக்குங்கள்..!! அரசாங்கத்திடம் விடுக்ப்பட்டுள்ள கோரிக்கை..!!

நாடு முழுவதும் குறைந்தது 3 வாரங்களுக்காவது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்சன ராஜகருணா இந்த கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.கொரோனா தொற்றின் இரண்டாம் அலையிலிருந்து மீண்டெழுவதற்காக இந்த ஊரடங்கை அமுல்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஆரம்பத்திலிலேயே கம்பஹா மாவட்டத்தை முடக்கம் செய்திருந்தால் நாடு முழுவதிலும் தொற்று பரவாமல் தடுத்திருந்திருக்கலாம்.ஆனால், அரசாங்கம் அதனை செய்யவில்லை என்பதால் தான் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.