வெளிமாவட்டங்களிலிருந்து யாழ் நகருக்குள் நுழையும் அனைவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை..!! இன்று அதிகாலை முதல் ஆரம்பம்..!!

யாழ். மாவட்டத்திற்குள் நுழையும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சகலருக்கும் பீ்.சி.ஆர் பரிசோதனை நடத்தும் நடவடிக்கை இன்று அதிகாலை தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் – நாவற்குழி சந்திப்பகுதியில் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் அனைவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது.இன்று அதிகாலை தொடக்கம் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.