கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி காணாமல்போனவர் சடலமாக மீட்பு..!! கிளிநொச்சியில் சோகம்..!!

கிளிநொச்சி கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி, காணாமல்போனோரின் சடலம், கடற்படையினரின் உதவியுடன் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில், குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்று, அதில் இறங்கியபோது நீரில் மூழ்கி, கானமல்போயுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரதேச மக்களினால் தேடும் பணி நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையிலேயே இன்று, கடற்படையினரால் காணாமல் போனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர், கிளிநொச்சி- கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதான இரத்தினம் லோகிதன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.மேலும், உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.