ஒரு லட்சம் காணித் துண்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..விரைவில் ஆரம்பம்..!!

ஒரு லட்சம் காணி வழங்கும் திட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் காணி கோரியவர்களின் விண்பங்களை ஆராய்ந்து நேர்முக தேர்வினை நடத்தி பட்டியலிடுத்தி முன்னுரிமை தேவையாளர்களை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 2500 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மேற்படி கலந்துரையாடலில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.அவற்றிற்கு அமைய தற்போது விண்ணப்பித்தவர்களில் ஒரு ஏக்கருக்கும் குறைவாக விண்ணப்பித்தவர்களிற்கும் வதிவிட பிரதேச செயலாளர் பிரிவிற்குள் காணி கோரியவர்களிற்கே முதலில் நேர்முகத் தேர்வினை நடாத்தி தகுதியானவர்களை இனம் கண்டு பட்டியிலுடுவதோடு அடுத்த கட்டமாக எஞ்சியவர்களிற்கான நேர்முகத் தேர்வினை நடாத்துதல்.காணி கோரி விண்ணப்பித்தவர் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவிலேயே நேர்முகத் தேர்வினை நடாத்துவதன் மூலமே விண்ணப்பதாரிக்கு வேறு நிலம், முயற்சி நிலமை தொடர்பான விபரங்களை உறுதிப்படுத்த முடியும் என்பதனால், வசிக்கும் பிரதேச செயலகத்திலேயே நேர்முகத் தேர்வினை நடாத்துதல்.ஒரே குடும்பத்தில் எத்தனைபேர் விண்ணப்பித்திருப்பினும் முதல் கட்டமாக ஒருவருக்கு மட்டுமே சிபார்சு செய்தல்.போன்ற தீர்மானங்கள் மாவட்டச் செயலாளர் தலமையில் எட்டப்பட்டுள்ளது.இக் கலந்துரையாடலில், காணி ஆணையாளர், உள்ளூராட்சி ஆணையாளர், தெங்கு அபிவிருத்திச் சபை, என பல திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.