ஹட்டன் வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா!!

ஹட்டன் வட்டவளைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 28 ஊழியர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்று நடத்தப்பட்ட துரித ஆன்டிஜன் சோதனையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த தொழிற்சாலையில் பணியாற்றிய வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 14ஆம் திகதி உறுதியானது.அவருடன் தொடர்பில் இருந்த 60 பேர் 17ஆம் திகதி பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.இதையடுத்து இன்று (25) தொழிற்சாலையின் 451 ஊழியர்கள் விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனையின் போது, ​​21 பெண் ஊழியர்கள் மற்றும் 7 ஆண் ஊழியர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அம்பகமுவ பிரதேச செயலக பகுதியில் வசிப்பவர்கள்.