சற்று முன்னர் கிடைத்த செய்தி…யாழில் இன்னுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் மேலுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதியானது.யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மருதனார்மட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.