மிக நீண்ட நாட்களின் பின் விமானப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம்..!!

கொரோனா வைரஸ் காரணமாக உள் வருகைக்காக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையம் நாளைய தினம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோவ் நகரத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குழுவினர் நாளைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளனர்.எனினும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாதென கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.ரஷ்ய விமான சேவையான ஏரோப்லொட் விமான சேவையின் விமானம் ஒன்றில் அந்த நாட்டைச் சேர்ந்த 200 பணக்காரர்கள் இலங்கை வரவிருந்தனர்.எனினும் ஐரோப்பா முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாதிரியினால் விமான பயணங்களை இரத்து செய்துள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எனினும், இந்த ரஷ்ய நாட்டவர்கள் மேலும் சில நாட்களின் பின்னர் இலங்கை வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.