ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு அணிகளுக்கு பி.சி.சி.ஐ. அனுமதி!! 2022 ல் நடைமுறைக்கு.!

இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இரண்டு புதிய அணிகள் சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011 ஆம் ஆண்டில் இந்த தொடரில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.அத்துடன் பி.சி.சி.ஐ.யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.மேலும், ஐபிஎல் போட்டிகளில் புதிய இரண்டு அணிகளை சேர்க்க பிசிசிஐ ஒப்புதல் அளித்தது குறித்தும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் புதிய அணிகளாக இரண்டு அணிகளை சேர்ப்பதற்கான கோரிக்கையை நடைமுறைப்படுத்த பிசிசிஐ ஆர்வம் காட்டியது. இருப்பினும் புதிய வீரர்களை போட்டிக்கு தயார் படுத்துவது, புதிய டெண்டர் மூலம் வீரர்களை ஏலம் எடுப்பது. அணியை வடிவமைப்பது என பல விடயங்கள் இருக்கின்றன.இப்படி பல வேலைகள் இருப்பதால், அதற்கான போதிய கால அவகாசம் தற்போது இல்லாததால் அடுத்த ஆண்டு 8 அணிகள் மட்டுமே விளையாடும் என்றும் அதற்கடுத்த 2022ஆம் ஆண்டில் 10 அணிகள் கொண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடருக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பை கருத்தில்கொண்டு 8 அணிகள் மட்டுமல்ல இனி எதிர்காலத்தில் 10 அணிகள் தொடர்ச்சியாக விளையாடும் என்றும் அவர்கள் முடிவு செய்திருந்தனர். மேலும் பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையிலான ஒரு அணியும், செயற்குழு தலைவர் ஜெய்ஷா அவர்களின் தலைமையில் ஒரு அணியும் கொண்டு ஒரு நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியை அகமதாபாத் நகரில் உள்ள மோதிரா மைதானத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.இந்த போட்டி 26ம் திகதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மீண்டும் சௌரவ்கங்குலி களம் இறங்கி விளையாட உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.